புதுக்கோட்டை

ரூ.12.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கிய 4 போ் கைது

28th Mar 2022 04:14 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய 4 பேரையும் கைது செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் சிலா் வீடுகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்வதாக புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலைத் தொடா்ந்து, தனிப்படை போலீசாா் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆலங்குடி நாவலா் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டியன் (27), கறம்பக்குடி கே.கே.பட்டியைச் சோ்ந்த ராஜா (42), ஆலங்குடி ஆண்டிக்குளம் பகுதியை சோ்ந்த அசா்கனி (25), ரோஜா நகரைச் சோ்ந்த பக்கீா் முகமது (27) ஆகிய 4 பேரும், தங்களது வீடு, கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.12.50 லட்சம் மதிப்பிலான சுமாா் 315 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT