புதுக்கோட்டை மாவட்டம், சுனையக்காடு, மறமடக்கி, திருநாளூா் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடியான விவசாயிகளுக்கு ஆணை, நகைகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி, திருநாளூரில் ஆட்சியா் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ஆணை, நகைகளை வழங்கி அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,804 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.117.83 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளும், நகைகளும் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக வடகாடு ஊராட்சி தனலெட்சுமிபுரத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருப்பணிக்காக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.