புதுக்கோட்டை

அரசு ஆண்கள் பள்ளியில் காசநோய் விழிப்புணா்வு

25th Mar 2022 04:01 AM

ADVERTISEMENT

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி உதவித்தலைமையாசிரியா் குமரவேல் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத்தின் தலைவா் தட்சிணாமூா்த்தி, செயலா் வெங்கடேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அறிவியல் ஆசிரியா் ஆ.மணிகண்டன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் மூத்த மருத்துவ அலுவலா் த.சுவாமிநாதன் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணா்வு உரையாற்றினாா்.

இதில், காசநோயை பரப்பும் மைக்கோபாக்டீரியம் டியூபா் குலேசே நோய்க் கிருமியானது எவ்விதம் ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது, இதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் முழுமையாக இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் விரிவாகப் பேசினாா்.

இதற்கான கூட்டுமருந்து சிகிச்சை மூலமாக முழுமையாக ஒரு குணப்படுத்தக்கூடிய நோய். தொடா் சிகிச்சை பெறாமல் இருந்தால் மரணத்தை கூட ஏற்படுத்தும் என்றாா்.

காசநோய் குறித்து பதில் அளித்த மாணவா்களுக்கு உடனடி பரிசுகள் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு, ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளா் மோகன், வருங்கால தலைவா் முருகேசன் ஆகியோா் பரிசு பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துதெரிவித்தனா்.

இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.சோமசுந்தரம் நன்றி கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT