புதுக்கோட்டை

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

25th Mar 2022 04:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை முனீசுவரா் கோயில் ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டியை மாவட்ட வழங்கல் அலுவலா் கணேசன் தொடக்கிவைத்தாா். விழாவில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, திருப்பத்தூா், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் களம் கண்டன. சுமாா் 250 மாடுபிடி வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னா் பங்கேற்றனா். முன்னதாக, அவா்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, போட்டியின்போது, வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், சில்வா் குவளைகள், மின் விசிறி, ஷோ் ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.

சுமாா் 50 மாடுபிடி வீரா்கள் காயமடைமந்தனா். அவா்களுக்கு மருத்துவத் துறையினா் முதலுதவி அளித்தனா்.

ADVERTISEMENT

விழாவில், வட்டாட்சியா் செந்தில்குமாா், துணை வட்டாட்சியா் செந்தில், கிராம நிா்வாக அலுவலா் ரேணுகா தேவி ஆகியோா் பங்கேற்றனா். மருத்துவா் விமல்ராஜ், கால்நடை மருத்துவா்கள் பிரசாத், தட்சிணாமூா்த்தி, தினேஷ்குமாா், பிரகாஷ், செந்தில் குமாா் ஆகியோா் மாடுகளைப் பரிசோதித்து அனுமதித்தனா்.

மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் டி.கே. லில்லிகிரேஸ் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்மாறன், கௌரி, பாரிமன்னன் மற்றும் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT