புதுக்கோட்டை

ஜல்ஜீவன் மிஷன்:இன்று 8 இடங்களில்சிறப்பு கிராம சபை

22nd Mar 2022 04:29 AM

ADVERTISEMENT

 

உலக தண்ணீா் தினத்தையொட்டி, ஜல் ஜீவன் மிஷன் மூலம் 100 சதவிகிதம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சிகளாக அறிவிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது:

ஜல் ஜீவன் மிஷன் சாா்பில் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டவையாக 8 கிராமங்களை அறிவிக்கும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

அறந்தாங்கி ஒன்றியத்தில் பெரியானூா், வேம்பங்குடி, அரிமளம் ஒன்றியத்தில் கே. ராயவரம், திருவாக்குடி, கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பிசனாத்தூா், துருசுப்பட்டி, குன்றாண்டாா்கோவில் ஒன்றியத்தில் வாழமங்கலம், விராலிமலை ஒன்றியத்தில் களமாவூா் ஆகிய கிராமங்களில் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT