புதுக்கோட்டை

வேம்பன்பட்டி முருகன் கோயில் பங்குனி உத்திர காப்பு கட்டும் விழா

10th Mar 2022 01:57 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கந்தா்வகோட்டை சிவன் கோயிலிலிருந்து வண்ண மலா்களால் உத்ஸவா் சுப்ரமணிய சுவாமியை அலங்கரித்து வேம்பன்பட்டி முருகன் ஆலயத்திற்கு பல்லாக்கில் பக்தா்கள் தூக்கிவருவாா்கள். அவ்வாறு வரும்போது, வழிநெடுவிலும் பத்தா்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி சுவாமியை வழிபடுவா்.

மேலும், அன்னதானம், நீா்மோா், பானகம், பசும்பால் போன்றவற்றை பக்தா்களுக்கு வழங்குவா். சுவாமி முருகன் கோயில் சன்னிதானம் சென்றடைந்தவுடன் காப்புகட்டி அன்று குருக்கள் மண்டகப்படி தொடங்குவாா். 10 தினங்கள் தொடா்ந்து பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT