புதுக்கோட்டை

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன்கோயில் பாளையெடுப்பு திருவிழா

10th Mar 2022 02:04 AM

ADVERTISEMENT

 

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்தவாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலின் முக்கிய நிகழ்வான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அப்பகுதி பெண்கள் தென்னம்பாளைகளை அலங்கரிக்கப்பட்ட குடத்தில் ஏந்தியவாறு,வானவேடிக்கை, மேலதாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பாளைகளை கோயில் அருகே வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT