புதுக்கோட்டை

பள்ளிக் கல்வி உதவித்தொகை தோ்வை 5,317 மாணவா்கள் எழுதவுள்ளனா்

3rd Mar 2022 02:05 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தோ்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,317 மாணவா்கள் எழுதுகின்றனா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இத்தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தலைமை வகித்துப் பேசியது:

வரும் மாா்ச் 5ஆம் தேதி சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வை 5,317 மாணவா்கள் எழுதுகின்றனா்.

ADVERTISEMENT

இத்தோ்வுக்கு முந்தைய நாள் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் ஆகியோா் தோ்வு மையங்களுக்குச் சென்று சரியான திட்டமிடலுடன் கூடிய முன்னேற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மாணவா்கள் கருப்புப் பந்து முனை பேனாவினை (பால்பாயிண்ட்) பயன்படுத்த வேண்டும் என்றாா் சாமி சத்தியமூா்த்தி.

கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மஞ்சுளா, மணிமொழி, ராஜாராமன், பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா மற்றும் முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT