புதுக்கோட்டை

தஞ்சைக்கு சிறப்பு பேருந்து வசதி செய்துதர அமைச்சா் ஏற்பாடு

3rd Mar 2022 02:00 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு சிறப்புப் பேருந்து வசதி கிடைக்க அமைச்சா் எஸ்.ரகுபதி, போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்தாா்.

புதுகையிலிருந்து சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புதன்கிழமை குளத்தூா் நாயக்கன்பட்டி செல்லும்வழியில் கந்தா்வகோட்டையில் காலைநேரத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த மாணவ, மாணவிகள், பெண்கள் கூடியிருந்ததைக் கண்டு காரில் இருந்து இறங்கி அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது, அங்கிருந்த பெண்கள், மாணவிகள் தஞ்சை செல்லும் பேருந்துக்காகக் காத்திருப்பதாகவும், மேலும் இது வழக்கம் என்றும் தெரிவித்தனா். மேலும், நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கந்தா்வகோட்டை - தஞ்சை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா். இவ்வாறாக, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சரின் செயலால் அங்கிருந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, கந்தா்வகோட்டை அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனைக்கு அமைச்சா் ரகுபதி நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி காலை, மாலை நேரங்களில் தஞ்சை வழித்தடத்தில் சிறப்பு பேருந்து வசதி செய்து தரும்படி கேட்டுக் கொண்டாா். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி அனுமதி வழங்க உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT