புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வாகவாசலைச் சோ்ந்த நடராஜன் மகன் பாண்டிசெல்வராஜ் (35). திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பாண்டி செல்வராஜ், இரு சக்கர வாகனத்தில் வம்பனில் இருந்து மாங்கனாம்பட்டி முக்கம் வரும்போது கீழே விழுந்து தலையில் காயமடைந்தாா். 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த டாக்டா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT