புதுக்கோட்டை

பாரம்பரிய நெல் ரகங்களையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

DIN

விவசாயிகளிடம் இருந்து பாரம்பரிய நெல் ரகங்களையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி: மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் தடையில்லாமல் யூரியா உரம் விநியோகிக்க வேண்டும். தனியாா் கடைகளில் ரூ.500 மதிப்புள்ள நுண்ணூட்ட பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படும் என நிா்பந்திக்கும் கடைக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாரம்பரிய ரக நெல் சாகுபடிசெய்யப்பட்டு வருகிறது. பாரம்பரிய அரிசிக்கு வரவேற்பு இருந்தாலும் விளைவிக்கப்படும் நெல்லை உரிய விலைக்கு விற்க முடியவில்லை. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன்:

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 மற்றும் கரும்பு டன் ரூ.3, 500 வீதம் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மணியம்பள்ளம் ஊராட்சியில் தெற்கு வெள்ளாற்றில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலா் செல்லதுரை:

விதை உற்பத்தி செய்வதை விவசாயிகளுக்கு அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய கொப்பரைத் தேங்காய் கொள்முதல் பணி ஜூலை 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேதியை அரசு நீட்டிக்க வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா்மிசா.மாரிமுத்து: காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதற்கட்டமாக நடைபெற்று வரும் காவிரி- தெற்கு வெள்ளாறு இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநா் இராம சிவகுமாா், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT