புதுக்கோட்டை

ஓய்வூதியா்கள் வீட்டிலிருந்தபடி உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்க ஏற்பாடு

DIN

மாநில அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் தங்களின் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கு. தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள், வரும் ஜூலை 1 முதல் செப்டம்பா் 30ஆம் தேதி வரை, அவா்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை, அஞ்சல் அலுவலா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமாா் 7,15,761 போ் வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில், தங்கள் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியா்கள் நேரில் வரும் சிரமத்தைத் தவிா்க்கும் பொருட்டு,

ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி’ , ஓய்வூதியதாரா்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 அஞ்சலரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி அஞ்சலா் அலுவலரைத் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT