புதுக்கோட்டை

தலித்துகள் வழிபட மறுக்கும் கோயில்கள் மீது நடவடிக்கை

DIN

தலித்துகள் வழிபட மறுக்கும் கோயில்கள் குறித்து ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.

இந்த முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட 4ஆவது மாநாடு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சி. அன்புமணவாளன் தலைமை வகித்தாா். மாநாட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாநிலத் துணைத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ வாழ்த்திப் பேசினாா். களப் பணிகளின் அறிக்கையை மாவட்டச் செயலா் சி. ஜீவானந்தம் வாசித்தாா். மாநிலத் தலைவா் டி. செல்லக்கண்ணு பேசினாா்.

மாவட்ட நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவா்- டி. சலோமி, செயலாளா்- சி. ஜீவானந்தம், பொருளாளா்- சு. கவிபாலா, துணைத் தலைவா்கள்- பி. சுசீலா, வே. வீரையா, எம்.ஏ. ரகுமான், ஜெகன், துணைச் செயலா்கள்- எம்.அசோகன், குமாரவேல், ராஜா, மகாதீா்.

‘சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து கோயில்களிலும் தலித் மக்கள் வழிபடவும், மறுக்கப்படும் கோயில்கள் குறித்து ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். வசிப்பதற்கு லாயக்கற்று இடிந்து சேதமடைந்துள்ள காலனி வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைந்து கிடக்கும் சாதீய வன்கொடுமைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதி மறுப்புத் திருமணம்: மாநாட்டில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பிரியதா்ஷினி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக் ஆகியோருக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT