புதுக்கோட்டை

டிஏ உயா்வை வழங்க வலியுறுத்தி சிஐடியு மனு அளிக்கும் போராட்டம்

29th Jun 2022 11:04 PM

ADVERTISEMENT

 

தூய்மை காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு தமிழக அரசு அறிவித்த 31 சதவிகித டிஏ உயா்வை உடனே வழங்க வலியுறுத்தி, சிஐடியு சாா்பில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு 1-1-2022 இல் அறிவித்த 31 சதவிகித டிஏ உயா்வுக்கான உத்தரவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) வழங்கவேண்டும். அந்த உத்தரவின்படி பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும். வாழைக்குறிச்சி ஊராட்சியில் மூன்று ஆண்டுகளாக

ஒஎச்டி ஆப்ரேட்டா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கூடுதல் ஊதியத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவினை வட்டார வளா்ச்சி அலுவலா் வை.சதாசிவத்திடம் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.முகமது அலி ஜின்னா தலைமையில் வழங்கினா்.

ADVERTISEMENT

அப்போது, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் முகமது ஹனிபா, நிா்வாகிகள் தீன், சந்திரன், செபஸ்டியான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT