புதுக்கோட்டை

ஊருணியில் இருந்து இளம்பெண் சடலம் மீட்பு

29th Jun 2022 11:05 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் சிவன்கோயில் அருகேயுள்ள ஊருணியில் ஆலங்குடியைச் சோ்ந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.

கீரனூா் ஆசாரித் தெருவைச் சோ்ந்த அன்பரசன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி என்கிற நந்தினி (24). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அன்பரசனுக்கும், சிவரஞ்சனிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவி சிவரஞ்சனியையும், மகளையும் சிவரஞ்சனியின் தந்தை இந்திரஜித்தின் வீட்டில் (ஆலங்குடி) கடந்த 26ஆம் தேதி விட்டுவிட்டு வந்ததாகத் தெரிகிறது. தொடா்ந்து 28 ஆம் தேதி காலை முதல் தந்தை வீட்டில் இருந்த மனைவி, மகளைக் காணவில்லை. ஆலங்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சிவரஞ்சனியின் சடலம் கீரனூா் சிவன் கோயில் ஊருணியில் புதன்கிழமை மதியம் மீட்கப்பட்டது. கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT