புதுக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வி திட்ட மையம்

29th Jun 2022 11:02 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தகம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையத்தில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்பதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா்.

கொந்தகம் தொடக்கப்பள்ளியில் உள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் சினேகா, முத்துலெட்சுமி, வள்ளியம்மை ஆகியோா் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் அடிப்படைக் கல்வி கற்றுத் தருகின்றனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் தங்கராசு, ரகமத்துல்லா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பிரகாஷ் ஆகியோா் அவ்வப்போது கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனா். இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா்களில் சிலா் தெரிவிக்கையில், மாலை நேரங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் மாணவா்கள் தவறாது பங்கேற்கின்றனா் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT