புதுக்கோட்டை

குட்கா, புகையிலை விற்ற 2 போ் கைது

29th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விராலிமலை பகுதிகளில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசியத் தகவலின்பேரில், விராலிமலை காமராஜா் நகா் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் போலீசாா் புதன்கிழமை திடீா் சோதனையிட்டனா். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் 14.700 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து விற்பனையில் ஈடுபட்ட மணமேல்குடியைச் சோ்ந்த சுல்தானை (54) போலீசாா் கைது செய்தனா். அவரிடம் மேற்கொண்ட தொடா் விசாரணையில், திருச்சி மாவட்டம் இளங்காகுறிச்சியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா(25) என்பவரிடம் இருந்து 15 கிலோ என மொத்தம் 29.700 கிலோ கிராம் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து சுல்தான், அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT