புதுக்கோட்டை

அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்க விவசாயிகள் கோரிக்கை

29th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

மின்பாதையில் மரக்கிளைகள் உரசுவதால் கந்தா்வகோட்டை வட்டம், பிசானத்தூா் ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணிமனை கிளை அலுவலகம் மற்றும் வளாகத்தின் அருகே உள்ள கருவேல மரங்கள், தென்னை மரங்கள் அவ்வழியே செல்லும் மின் வயா்களை உரசுவதால் அடிக்கடி மின் ஏற்படுவதாக பிசானத்தூா் ஊராட்சி விவசாயிகள் கருதுகின்றனா். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் இப்பகுதியில் விவசாயப் பணிகள் முடங்கிப் போகிறதாம். ஆகவே போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT