புதுக்கோட்டை

சிட்டி ரோட்டரி சங்கத்தின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

29th Jun 2022 11:04 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவராக ஆா். சிவக்குமாா், செயலராக எஸ். செந்தில்வேல், பொருளாளராக ஏ.ஆா். முகமதுஅப்துல்லா உள்ளிட்டோருக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் இரா. ராஜா கோவிந்தசாமி பணியேற்பு செய்து வைத்தாா். முன்னதாக மருத்துவா் ஜி. மாரிமுத்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் புதுக்கோட்டை நகராட்சிக்குக் குப்பைக் கூண்டினை அமைச்சா் வழங்க, அதை நகராட்சி ஆணையா் நாகராஜன் பெற்றுக் கொண்டாா். மேலும், கல்லூரி மாணவிக்கு காதொலிக் கருவியும் வழங்கப்பட்டது. பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தங்க மங்கை ப.அனுராதாவுக்கு, சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. குருதிக்கூடு என்ற அமைப்புக்கு சிறந்த குருதிக் கொடையாளா் விருது வழங்கப்பட்டது. மேலும், கல்வி உதவித் தொகையாக 2 மாணவா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்வுக்கு, மண்டலச் செயலா் கண. மோகன்ராஜா, பட்டயச் செயலா் க. நைனா முகம்மது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா்கள் எஸ். பாா்த்திபன், எஸ். அழகப்பன் தொகுத்து வழங்கினா். நிறைவில், சங்கச் செயலா் எஸ். செந்தில்வேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT