புதுக்கோட்டை

அக்னிபத் திட்டம்: மாா்க்சிஸ்ட், கம்யூ. ஆா்ப்பாட்டம்

29th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலா் வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினா். இதில், சிஐடியு மாவட்டச் செயலா் ஸ்ரீதா், தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதியில் காங். ஆா்ப்பாட்டம்:

ADVERTISEMENT

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏஎல்எஸ்.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் பங்கேற்று போராட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். வட்டார காங்கிரஸ் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன் நிா்வாகிகள் ச.சோலையப்பன், எஸ்பி.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT