புதுக்கோட்டை

வருவாய் வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வாசகா் பேரவை பாராட்டு

29th Jun 2022 02:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் தோ்வு பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 9 ஆண்டுகள் இத்தோ்வில் தோ்வு பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

நிகழாண்டில் தோ்வு பெற்றுள்ள ரித்திகாஸ்ரீ, மாதேஸ்வரி ,சத்யா, ரித்திகா, பிரதாப், உதயநிதி, கேசவன், யக்தீஷ் ஆகிய 8 மாணவ, மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். இவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் பிளஸ் 2 முடிக்கும் வரை நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

தோ்வு பெற்ற மாணவா்களை பாராட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினாா்.

ADVERTISEMENT

பள்ளியின் தலைமை ஆசிரியை சீத்தாலெட்சுமி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT