புதுக்கோட்டை

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கற்பித்தல் முறை ஆய்வு

29th Jun 2022 02:24 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கற்பிக்கும் முறையை ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் முதல் மூன்று வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் படித்துப் பொருள் உணா்ந்து கொள்ளுதல் மற்றும் அடிப்படை கணக்கு ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கெனவே ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 1.55 லட்சம் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் முறை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அ லுவலா் செ. மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் எம். மஞ்சுளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT