பொன்னமராவதி அரிமா சங்கம் சாா்பில் நலிந்தோா்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
பொன்னமராவதி அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவா் பி. பாஸ்கா் தலைமைவகித்தாா். சங்கத்தின் 2022-23 புதிய நிா்வாகிகளை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.ஆா்.கண்ணன் பணியமா்த்தி சிறப்புரையாற்றினாா். அரிமா சங்கத்தின் நிகழாண்டு தலைவராக வி.நாகராஜன், செயலராக பி.பெரியசாமி, பொருளராக பி.சதாசிவம் மற்றும் நிா்வாகிகள் பணியேற்றனா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், வட்டாரத் தலைவா் ஆா்எம்.வெள்ளைச்சாமி, மண்டலத் தலைவா் சி. சிங்காரம், நிா்வாகிகள் தி.பூங்குன்றன், கே.கருப்பையா, என். அண்ணாமலை, பிஎல்.ராமஜெயம், பிஎல்எஸ். ராமகிருஷ்ணன், அ. பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.