பள்ளி மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வு முடிவுகளில், புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளது.
இப்பள்ளியில் இருந்து தோ்வெழுதிய கா. ஆயிஷா ஷிபானா, ஆா்எம். ஆவிச்சி விஸ்வநாதன், பொ. முத்துவடிவேல், ச. அருணன், ம. அவினாஸ், நா. வெங்கடேஸ்வரன், வெ. கோமதி, க. ஸ்வேதா, பா. சுபஸ்ரீ ஆகியோா் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.
இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி, ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம் மூா்த்தி, நிா்வாக இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, துணை முதல்வா் குமாரவேல் ஆகியோா் பாராட்டினா்.