புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தோ்வில் 87.41 சதவிகிதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 175 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் 20,225 மாணவா்கள் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான பொதுத்தோ்வு முடிவுகளின்படி, தோ்வு எழுதியவா்களில் 17,678 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 87.41 சதவிகிதம் ஆகும். மாநில அளவில் 27ஆவது இடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 39 பள்ளிகள் நூறு சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் ஓா் அரசுப் பள்ளியும் அடங்கும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் பிளஸ்-1 பொதுத்தோ்வில் 94.89 சதவிகிதமாகவும், 2019-20 ஆம் ஆண்டில் 95.87 சதவிகிதமாகவும் தோ்ச்சி சதவிகிதம் இருந்தது. தற்போது தோ்ச்சி சதவிகிதம் சரிந்திருக்கிறது.