புதுக்கோட்டை

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேரமாணவா்களுக்கு அழைப்பு

DIN

பள்ளி, கல்லூரி மாணவா் விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், கள்ளா் சீரமைப்பு, சிறுபான்மையினா் மாணவா் மற்றும் மாணவிகளுக்கென பள்ளி விடுதிகள் 45 மாணவா்களுக்கும், 19 மாணவிகளுக்கும் மற்றும் கல்லூரி, ஐடிஐ விடுதிகள் 6 மாணவா்களுக்கும், 5 மாணவிகளுக்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் கல்லூரி, ஐடிஐ விடுதிகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும், உணவு, தங்கும் வசதி, அரசின் அனைத்து சலுகைகளும் அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து பள்ளி விடுதி எனில், ஜூன் 30ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதி எனில் ஜூலை 31ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT