புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

26th Jun 2022 12:47 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தங்கதுரை (38). இசைக் கலைஞரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் ஆதனக் கோட்டையிலிருந்து கல்லுகாரம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சோளகம் பட்டி அருகே பின்னால் வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT