புதுக்கோட்டை

ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராதநகரப்பட்டி துணை மின்நிலையம்

26th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ள துணை மின் நிலையத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் அதிமுக ஆட்சியில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டுக்கு முன்னா் பணிகள் நிறைவடைந்தன. இருப்பினும், இதுவரை இந்த துணை மின்நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, உயா் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டவுடன் உடனடியாக துணை மின் நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றனா். எனவே பொதுமக்கள், விவசாயிகள் நலன்கருதி உடனடியாக துணை மின் நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என இப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT