புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம்

26th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் செல்வமணி, பொருளா் கிரிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கிராம ஊராட்சி ஆணையா் வை.சதாசிவம் பங்கேற்று ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 15 ஆவது நிதிக்குழு மானிய நிதிக்கு பணிகள் தோ்வு செய்தல் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், ஊராட்சிக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகளுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா் பணி வழங்கவேண்டும். காலியாக உள்ள ஊராட்சிச் செயலா் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சித் தலைவா்கள் பொன்னம்மாள் பெரியபொன்னன், ராமசாமி, ராமையா, ரேவதி ஜெயராமன், சந்திரா சக்திவேல், செல்வராஜ், பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT