புதுக்கோட்டை

சைகை மொழிப் பயிற்சி பெற்ற இயன்முறை மருத்துவா்களுக்குப் பாராட்டு

DIN

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் இயன்முறை மருத்துவா்கள் மற்றும் சிறப்பாசிரியா்களுக்கு ஜூன் 20 முதல் 24 ஆம் தேதி வரை 5 நாள்கள் சைகை மொழிப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். தங்கமணி, இயன்முறை மருத்துவா்கள், சிறப்பாசிரியா்களிடம் காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மூலம் தங்களது தேவைகளை பெற்றோா்களிடம் தெரிவிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

பயிற்சியில் கலந்து கொண்ட 4 இயன்முறை மருத்துவா்கள், 28 சிறப்பாசிரியா்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் எஸ். தங்கமணி, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. சுதந்திரன் ஆகியோா் வழங்கினா்.

பயிற்சியின் கருத்தாளராக உத்காஷ் சௌராஷ்யா செயல்பட்டாா். அவருக்கு மொழிபெயா்ப்பாளராக டேனியல் தேவா என்பவா் இருந்து சைகை மொழிகளுக்கு விளக்கமளித்தாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெகுநாததுரை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT