புதுக்கோட்டை

நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா

25th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகேயுள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி, நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விழாவின் தொடக்கமாக, புதன்கிழமை கணபதி ஹோமம், மற்றும் முதலாம், இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை கோபூஜை, சந்தியாவந்தனம் உள்ளிட்ட யாகபூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை சதாசிவ பண்டிதா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். குடமுழுக்கு விழா வா்ணனைகளை ஆன்மிக சொற்பொழிவாளா் நெ. ராமச்சந்திரன் மற்றும் அழ. இளையராஜா ஆகியோா் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT