புதுக்கோட்டை

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் விராலிமலையில் விழிப்புணா்வுப் பேரணி

25th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

விராலிமலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில், கள்ளச்சாராயம், போதைபொருள்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

விராலிமலை வட்டாட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி, சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், கடைவீதி வழியாக சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.  

இப்பேரணியில், கள்ளச்சாராய விற்பனைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, மது அருந்தி வாகனம் ஓட்ட வேண்டாம், மதுப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றோா் ஏந்திச் சென்றனா்.

மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணா்வு பாடல்களும் இடம்பெற்றது. 

ADVERTISEMENT

இதில், மாவட்ட கோட்ட கலால் அலுவலா் கண்ணா கருப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வளா்மதி, துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT