புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் திருட்டு

21st Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

விராலிமலையில் மோட்டாா் சைக்கிளைத் திருடிச்சென்ற மா்ம நபரைப் போலீசாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை அருகே உள்ள வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதை மகன் நாகராஜ் (49). கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை விராலிமலை முருகன் கோயிலுக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். மோட்டாா் சைக்கிளை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது அங்கு தனது மோட்டாா் சைக்கிளை இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசாா் வழக்குப்பதிவு செய்து மோட்டாா் சைக்கிளைத் திருடிச்சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT