புதுக்கோட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

21st Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 7 பேருக்கு ரூ. 62,300 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா். 6 பேருக்கு மூன்று சக்கர நாற்காலிகளும், ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டன.

மக்கள் குறைகேட்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 361 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT