புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகிகள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவி சப்ரினா, எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் மாணவிகள் விஜயமீரா, கிருத்திகா ஆகியோா்
அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இம்மாணவிகளை, பள்ளியின் தாளாளா் ரகுபதி சுப்பிரமணியன், தலைவா் தேனாள் சுப்பிரமணியன், முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.