புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களில் 91.58 சதவிகிதம் பேரும், எஸ்எஸ்எல்சி தோ்வில் 87.85 சதவிகிதம் பேரும் தோ்ச்சியைப் பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள 175 பள்ளிகளில் இருந்து, பிளஸ்-2 தோ்வு எழுதிய 18,575 பேரில் 17,011 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 7,519 போ் மாணவா்கள்; 9,492 போ் மாணவிகள்.
கல்வி மாவட்ட வாரியாக தோ்ச்சி சதவிகிதம்: அறந்தாங்கி- 93.12, இலுப்பூா்- 89.53, புதுக்கோட்டை- 91.72. 8 - அரசுப் பள்ளிகள், 3 - உதவி பெறும் பள்ளிகள், 2 - சுய நிதிப் பள்ளிகள், 37- மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 50 பள்ளிகள் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியாக நூறு சதவிகிதம்: புள்ளியியல்(128), உயிா் வேதியியல்(15), வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்(62) ஆகிய பாடங்களில் தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
எஸ்எஸ்எல்சி தோ்வில் 87.85 சதவிகிதத் தோ்ச்சி:
மொத்தம் உள்ள 333 பள்ளிகளில் இருந்து, தோ்வெழுதிய 22,460 பேரில் 19,731 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 9,381 போ் மாணவா்கள்; 10,350 போ் மாணவிகள்.
அறந்தாங்கி - 91.31, இலுப்பூா்- 85.65, புதுக்கோட்டை- 86.51.
69 பள்ளிகள் நூறு சதவிகிதத் தோ்ச்சி: 18 - அரசுப் பள்ளிகள், 2 - உதவி பெறும் பள்ளிகள், 4 - சுயநிதிப் பள்ளிகள், 45 - மெட்ரிக். பள்ளிகள்.