ஆலங்குடி அருகே சாராயம் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 120 லிட்டா் சாராயத்தைப் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள அழகன்விடுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்குப் போலீஸாா் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கந்தா்வகோட்டை அருகேயுள்ள மோகனூரைச் சோ்ந்த க.முத்துக்குமாா் (37) சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 120 லிட்டா் சாராயம், 250 லிட்டா் சாராய ஊறல்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.