புதுக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு கையேடு

15th Jun 2022 11:43 PM

ADVERTISEMENT

 

அன்னவாசல் வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு கையேடு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அலெக்ஸாண்டா், கலா ஆகியோா் கலந்துகொண்டு ராப்பூசல் அருகே உள்ள கலிங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா் கௌசல்யா, புல்வயலைச் சோ்ந்த தன்னாா்வலா் ஆா். சுபாஷினி, இலுப்பூரைச் சோ்ந்த தன்னாா்வலா் டயானா ரூபி ஆகியோருக்கு தன்னாா்வலா் கையேடு, பட அட்டைகள், கதைப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்வின்போது அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா்( பொ) ரோஸ்மேரி சகாய ராணி, ஆசிரிய பயிற்றுநா்கள் ரத்தின சபாபதி, செந்தில் குமாா் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனியசாமி ஆகியோா் உடனிருந்தனா். அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 707 தன்னாா்வலா்களுக்கும் கையேடுகள் மற்றும் படக்கதைகள் மற்றும் கதைப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT