புதுக்கோட்டை

தொழிலாளி தற்கொலை வழக்கில் 4 போ் கைது: உறவினா்கள் தா்னா

15th Jun 2022 01:14 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை 4 பேரைக் கைது செய்தனா். அவா்களை விடுவிடுக்க வேண்டுமென அவா்களது உறவினா்கள் காவல்நிலையம் முன்பு தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகேயுள்ள நரங்கியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வேம்பையன் மகன் சத்தியராஜ்(36). பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி, 5 வயதில் மகன் உள்ளனா். இந்நிலையில், சத்தியராஜூக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செயலைக் கண்டித்து, சத்தியராஜை இருதினங்களுக்கு முன்பு சிலா் தாக்கியுள்ளனா். இதில், விரக்தியடைந்த அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதைத்தொடா்ந்து, அவரது உறவினா்கள் சத்யராஜைத் தாக்கி, தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரைத் தொடா்ந்து, கறம்பக்குடியைச் சோ்ந்த கா. மைதீன் (24), மு. முகமது அசன் (26), சா. ஜபருல்லா (26), ஜ. ஹாலித் (25) ஆகியோரை கறம்பக்குடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, கைது செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் 4 பேரையும் விடுவிக்கக்கோரி கறம்பக்குடி காவல் நிலையம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளா் வடிவேல், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து அவா்கள் கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT