கந்தா்வகோட்டை பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டுவந்த 3 பேரை செவ்வாய்க்கிழமை போலீசாா் கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடா் திருட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 1.6.2022 அன்று கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பாண்டியராஜ் மனைவி சிவரஞ்சனி, அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை இரவுநேரத்தில் மா்மநபா்கள் வீடு புகுந்து திருடிச் சென்றனா். இதுகுறித்து சிவரஞ்சனி கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். புகாரின்பேரில், தஞ்சை மாவட்டம் வல்லம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் விஜயகாந்த் (38), ராஜேந்திரன் மகன் சிவகுமாா் (26) மற்றும் ராஜேந்திரன் மகன் விஜயகுமாா் (22) ஆகிய 3 பேரையும் போலீசாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். இதில், மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சிவரஞ்சனியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவா்கள் 3 பேரும் ஒப்புக் கொண்டனா். மேலும் ஆதனக்கோட்டை பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, அவா்கள் 3 போ் மீது
போலீசாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.