புதுக்கோட்டை

செவிலியா் கல்லூரியில் விளையாட்டு விழா

10th Jun 2022 02:06 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெஜெ செவிலியா் பயிற்சிப் பள்ளியின் 26ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கல்லூரி நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்விக் குழும அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் எஸ்.எம். குமரன் கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தும், போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கியும் பேசினாா். கல்லூரி முதல்வா் சுமித்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். விளையாட்டுத் துறை ஆசிரியா் கே. ஜெகதீஸ்பாபு விளையாட்டு அறிக்கை வாசித்தாா். முன்னதாக பேராசிரியை ராதா வரவேற்றாா். நிறைவில், பேராசிரியை நிமேஷா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT