புதுக்கோட்டை

குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

10th Jun 2022 02:05 AM

ADVERTISEMENT

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ராகேஸை, கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

90 கிலோ எடைக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ராகேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இவரை, கல்லூரியின் தலைவா் ஏவிஎம் செல்வராஜ், நிா்வாக இயக்குநா் ஆா். வைரவன், முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக், முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT