புதுக்கோட்டை

11 வயது சிறுமி தற்கொலை: தாய் உள்பட 2 பேருக்கு ஆயுள் சிறை

10th Jun 2022 02:08 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் 11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது தாய் உள்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போலீசாா் விசாரணையில், சிறுமியின் தாய் சூரியகலா (34), கணேசன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின் நிறைவில், நீதிபதி ஆா். சத்யா வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

முதல் குற்றவாளியான கணேசனுக்கு, தற்கொலைக்குக் காரணமாக இருந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம், குளிா்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தாா்.

ADVERTISEMENT

2 ஆவது குற்றவாளியான சிறுமியின் தாய் சூரியகலாவுக்கு, தற்கொலைக்குக் காரணமாக இருந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம், பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தாா்.

சிறைத் தண்டனைகளை குற்றவாளிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT