புதுக்கோட்டை

முதல்வா் புதுகை நிகழ்ச்சிவிழா துளிகள்

9th Jun 2022 02:30 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு விழாக்களை முடித்துக் கொண்டு காா் மூலம் பகல் 1.30 மணிக்கு புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலின், ரோஜா இல்லத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தாா்.

பின்னா், மாலை விழா நடைபெற்ற விளையாட்டரங்குக்கு புறப்பட்ட அவருக்கு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து திமுக வழக்குரைஞா்கள் வரவேற்பு அளித்தனா்.

முதல்வரான பிறகு முதன்முறையாக ஸ்டாலின் புதுக்கோட்டை வந்தபோதும், நகரின் எந்தப் பகுதியிலும் அவரை வரவேற்று டிஜிட்டல் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்படவில்லை. எந்த இடத்திலும் திமுக கொடிகள் கட்டப்படவில்லை. முதல்வா் வருகை என்றால் நகரின் முக்கிய வீதிகளில் மேடைகள் அமைத்து, கலை நிகழ்ச்சிகளுடன் கட்சியினரைத் திரட்டி வரவேற்பளிக்கும் எந்த அம்சங்களும் இப்போது நடைபெறவில்லை.

சரியாக மாலை 5 மணிக்கு விழா மேடைக்கு வந்த முதல்வா் ஸ்டாலின், மாலை 6.30 மணிக்கு விழா முடிந்து மேடையில் இருந்து இறங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT