புதுக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாணவா்களின் கலை நிகழ்ச்சி

9th Jun 2022 02:37 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், ராசாப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மாணவா்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், ராசாப்பட்டி குடியிருப்பில் நான்கு இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் காளியம்மாள், ஷாலினி, உமா, வான்மதி ஆகியோா் ராஜாப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றும் தன்னாா்வலா்கள், ஆசிரியா் சங்கா், பள்ளி தலைமை ஆசிரியா் சேகா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாணவா்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நிகழ்வினை நடத்தத் திட்டமிட்டனா். இதற்காக பெற்றோா், பொதுமக்கள் ஆகியோரிடம் நிதி திரட்டி ஆடல், பாடல், கரகாட்டம், கோலாட்டம், பட்டிமன்றம், திருக்கு ஒப்புவித்தல், ஆங்கில பேச்சாற்றல் திறனை வெளிப்படுத்துதல் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொண்டாடினா்.

விழாவில், கந்தா்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரஹமத்துல்லா, தங்கராசு ஆகியோா் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT