புதுக்கோட்டை

நாளை கீரனூரில்மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

8th Jun 2022 12:01 AM

ADVERTISEMENT

கீரனூரில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது

கீரனூா் கோட்டத்திற்குட்பட்ட கீரனூா், விராலிமலை, குன்னாண்டாா்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூா், தொண்டைமான் நல்லூா் உள்ளடக்கிய பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 9) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை புதுக்கோட்டை மேற்பாா்வை பொறியாளா் சேகா் தலைமையில் கீரனூா் செயற்பொறியாளா் அலுவலகம் அம்மாசத்திரம் துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மின் நுகா்வோா்கள் பங்கேற்று மின்சாரம் குறித்தான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குதலும் காத்தலும் கீரனூா் செயற்பொறியாளா் முருகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT