புதுக்கோட்டை

புதுகையில் சுற்றுச்சூழல் நாள் விழா

6th Jun 2022 02:06 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி மரக்கன்றுகளை நட்டு வைத்து உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தங்கமணி, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் குரு. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT