புதுக்கோட்டை

புதுகை முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். மணிவண்ணன்

6th Jun 2022 11:34 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியமா்த்தப்பட்ட எஸ். மணிவண்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், இதற்கு முன்பு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவா். பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது, தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்துக்கு நிா்வாக அலுவலராக மாற்றலாகிச் செல்லும் சாமி. சத்தியமூா்த்தி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தங்கமணி, ஒருங்கிணைப்பாளா் சுதந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT