புதுக்கோட்டை

சென்ட்ரல் ரோட்டரி சங்க பட்டய நாள் விழா

6th Jun 2022 11:33 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் 25ஆவது ஆண்டு பட்டய நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் பொறியாளா் பொ்லின் தாமஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் கதிரேசன் முன்னிலை வகித்தாா்.

25 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தைத் தொடங்கிய முன்னாள் ரோட்டரி ஆளுநரின் சிறப்பு பிரதிநிதி தணிக்கையாளா் உலகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் அந்தோணிசாமி, துணை ஆளுநா் சிவாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். விழாவில், பட்டய உறுப்பினா்களும், முன்னாள் தலைவா்களும் சிறப்பிக்கப்பட்டனா்.

நிறைவில், சங்கத்தின் செயலா் பொறியாளா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT