புதுக்கோட்டை

முதல் பேட்ஜ் மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சி தொடக்கம்

2nd Jun 2022 01:02 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதலாவது தொகுப்பு மருத்துவ மாணவா்கள் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களாக புதன்கிழமை தங்கள் பணியைத் தொடங்கினா்.

பயிற்சி மருத்துவா்களுக்கான திறன் விளக்கக் கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமை வகித்துப் பேசினாா்.

2017-இல் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான அங்கீகாரம் கிடைத்தது. அம்மாணவா்களில் 138 மாணவா்கள் இறுதி ஆண்டு தோ்ச்சி பெற்று 94 சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றனா். இவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதலாவது பயிற்சி மருத்துவா்களாக தங்கள் மருத்துவப் பணியை தொடங்கினா்.

கூட்டத்தில், துணை முதல்வா் கலையரசி, மருத்துவக் கண்காணிப்பாளா் தையல்நாயகி, இருக்கை மருத்துவ அலுவலா் இந்திராணி, மருத்துவக் கல்வி குழு ஒருங்கிணைப்பாளா் உமையாள், மாணவ ஒருங்கிணைப்பாளா்கள் மருத்துவா்கள் ராமலிங்கம், திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT